பாரதியின் பிறந்தநாள் அன்று மகாகவியின் மீது உள்ள பற்றின் காரணமாய் கிறுக்கியது...
முன்டாசை தலையில் கட்டி,
மீசையை முறுக்கி விட்டால்,
காட்சிக்கு கிடைத்திடுவான் ஒரு பாரதி!!
கவிபாட கிடைப்பான இன்னொரு பாரதி??
வசனங்கள் எழுதித்தந்து,
குரலிலே ஆண்மை சேர்த்தால் ,
செவிக்கு கிடைத்திடுவான் ஒரு பாரதி!!
வார்த்தைகளால் வெடிகள் வீசி,
கவிதைக்கு கந்தகம் பூசி,
நெஞ்சுக்குள் நெருப்பு ஏற்றிட கிடைப்பான இன்னொரு பாரதி??
Friday 11 December 2009
கிடைப்பான இன்னொரு பாரதி
Labels:
கவி,
கவிதை,
நெருப்பு,
பாரதி,
முண்டாசு,
முறுக்கு மீசை,
வசனங்கள்,
வார்த்தைகள்
| Reactions: |
Tuesday 17 November 2009
Monday 12 October 2009
தீபாவளி - DEEP ஆனா வலி
ஆசையாய் உறவினர் அனைவரும்
அவரவர் துணிகளை
ஆராய்ச்சி செய்தவண்ணம்
பண்டிகையை கொண்டாட...
அதற்கு காரணமானவன்
மட்டும் ஓரமாய் சிந்தனையோடு அமர்ந்திருந்தான்....
அவனுக்கு மட்டும் தீபாவளி - DEEPஆனா - வலியாய் தெரிந்தது ...
அவரவர் துணிகளை
ஆராய்ச்சி செய்தவண்ணம்
பண்டிகையை கொண்டாட...
அதற்கு காரணமானவன்
மட்டும் ஓரமாய் சிந்தனையோடு அமர்ந்திருந்தான்....
அவனுக்கு மட்டும் தீபாவளி - DEEPஆனா - வலியாய் தெரிந்தது ...
Tuesday 6 October 2009
நான் - 6
என்னை எரிக்க தீக்குச்சி
கொண்டு வந்தவர்களுக்கு
எப்படி புரியவைப்பது
நான் நெருப்பு என்று ???
கொண்டு வந்தவர்களுக்கு
எப்படி புரியவைப்பது
நான் நெருப்பு என்று ???
Labels:
சருகு,
சிந்தனை,
சுயவிளக்கம்,
தீக்குச்சி,
நான்,
நெருப்பு,
முடர்கள்
| Reactions: |
Tuesday 15 September 2009
Thursday 3 September 2009
ஆசிரியர் தினம்
ஆசிரியர் தினம் கொண்டாட
அனைவரிடமும் ஐந்து ருபாய் வசுல்செய்த
ஆசிரியர் தான்மட்டும் கொண்டாடினர்
தனியாய் - டாஸ்மாக்கில்.
அனைவரிடமும் ஐந்து ருபாய் வசுல்செய்த
ஆசிரியர் தான்மட்டும் கொண்டாடினர்
தனியாய் - டாஸ்மாக்கில்.
| Reactions: |
Friday 21 August 2009
ஐயகோ... பாரதி இதுவா நீ கண்ட கனவு???
'பள்ளி தலமனைத்தும் கோவில் செய்குவோம்' என்றான்
பாரதி... 'மெய்யாக்குகிறோம் மகாகவி பாரதியின்
கனவை' என அனைத்து கல்வி
நிறுவனங்களும் உண்டியல் குலுக்குவதையும்,
நிதிவசூலிப்பதையும் ஆரம்பித்துவிட்டன...
பாரதி... 'மெய்யாக்குகிறோம் மகாகவி பாரதியின்
கனவை' என அனைத்து கல்வி
நிறுவனங்களும் உண்டியல் குலுக்குவதையும்,
நிதிவசூலிப்பதையும் ஆரம்பித்துவிட்டன...
Subscribe to:
Posts (Atom)