நஞ்சுண்ட நாயகனை,
நடராஜப் பெருமனை,
நாரணனும் நான்முகனும்
அளந்திடாத ஜோதியை
அடியேனும் பணிந்தேன் !!!
காமனை எரித்தோனை,
கங்கையை சூடிய -
காலனின் காலனை,
காலசம்ஹார மூர்த்தியை
பாதத்தில் சரண்புகுந்தேன் !!!
சிவகாமி நேசனை,
தில்லையுள் கூத்தனை,
விண்ணோரும், மண்ணோரும்,
சிரம்தாழ்த்திப் பணியும்
சிவனை பணிந்தேன் !!!
நீலகண்ட மூர்த்தியை,
விடையேறும் வேதியனை,
விடமுண்ட விமலனை,
பிட்டுக்கு மண்சுமந்த
பித்தனின் தாள்பணிந்தேன் !!!
பிறைசூடிய பெருமானை,
பிச்சாடன மூர்த்தியை,
பாம்பணிந்த பரமனை,
பிரம்மனை எரித்த
பரமசிவன் தாள்பணிந்தேன் !!!
எந்தை ஈசனை,
எம்சிந்தை கவர்ந்தோனை,
வெண்சடை தரித்த
ஏகன் தாளன்றி
வேறெவர் தாள்பணிய ???
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment